பசிபிக் தீவு நாடான டோங்கா அருகே இன்று (மார்ச்.30) 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஆபத்தான சுனாமி அலைகள் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் வரையிலான கடலோரப் பகுதிகளைப் பாதிக்கக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.