விசாகப்பட்டினத்தில் இன்று (மார்ச்.30) SRH மற்றும் DC அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற SRH அணி முதல் பேட்டிங் செய்தது. இதனையடுத்து 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது. SRH சார்பில் அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய DC அணி, 16 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.