பழனி: மாராத்தான் போட்டி..கொடி அசைத்து துவங்கி வைத்த அமைச்சர்

63பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வாகரையில் பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மாரத்தான் போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். சென்னை, கோயமுத்தூர், திருச்சி, கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். 

மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு இலக்காக 10 கிலோமீட்டரும், பெண்களுக்கு இலக்காக 5 கிலோமீட்டரும் நிர்ணயம் செய்யப்பட்டது. போட்டியில் ஆண்கள் பிரிவில் திண்டுக்கலை சேர்ந்த முகேந்திரன் முதல் பரிசாக 10,000 ரூபாயும், திருப்பத்தூர் சேர்ந்த திருப்பதி இரண்டாம் பரிசாக 5000 ரூபாயும், மதுரையை சேர்ந்த ஜெயசீலன் மூன்றாம் பரிசாக 3000 ரூபாயும் வெற்றி பெற்று தட்டிச் சென்றனர். திருச்சியைச் சேர்ந்த வினோதினி முதல் பரிசையும், தேனியை சேர்ந்த அஸ்வினி இரண்டாம் பரிசையும், ஈரோட்டைச் சேர்ந்த வித்யா மூன்றாம் பரிசையும் பெண்கள் பிரிவில் பெற்றனர். 

மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுத் தொகையை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

தொடர்புடைய செய்தி