விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன்போது மாடுகளை குளிப்பாட்டி, பல்வேறு பொருட்களால் அலங்கரிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் பல வண்ணங்களில் மூக்காணங்கயிறு, தும்பு கயிறு, மணி சங்கு, திரு காணி, சாட்டைகள், கழுத்து மணி, நெத்தி மணி மற்றும் சாட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை படுஜோராக நடப்பது வியாபாரிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.