வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டது என கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் சூர்யா - வெற்றிமாறன் - தாணு ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த அப்டேட் கிடைத்ததால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.