புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடும் பரந்தூர் கிராம மக்களை, தவெக தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவுடன் தவெகவினர் சந்தித்துள்ளனர். அவர்களிடம், விவசாயம் பயிரிடப்படும் விவரம், நீர் நிலைகள் குறித்து கேட்டறிந்தனர். இதுகுறித்த அறிக்கை விஜய்யிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின், வரும் 19, 20 ஆகிய தேதிகளில் ஒரு நாள் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.