மாட்டு பொங்கலை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு இரண்டாயிரம் கிலோ காய்கறிகள், பழ வகைகள், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மஞ்சள், சந்தனம், பால், தயிர், கரும்புச்சாறு, இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்ட நிலையில் பக்தர்கள் திரளாக வழிபட்டனர்.