மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று (ஜன. 14) காளைகள் சீறி பாய்ந்தன. ஆறாவது சுற்றில் 77 காளைகள் களம் கண்ட நிலையில் அதில் 14 காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது. ஆறாவது சுற்றின் முடிவில் ஒரே ஒரு வீரர் மட்டும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களின் காளையை பிடித்த 2 வீரர்களை தாக்கிய உரிமையாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.