மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மலாட் பகுதியில் ஆயிஷா ஷேக் என்ற 91 வயது மூதாட்டி தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி 12 ஆம் தேதி மதியம் மூதாட்டி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடி, மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி, நகைகளை பறிக்க முயன்றார். அப்போது, திருடியின் முடியை இருக்கிப் பிடித்த மூதாட்டி, கையில் கிடைத்த கண்ணாடி டம்பளரை எடுத்து அடித்துள்ளார். தொடர்ந்து, அங்கிருந்த தப்பிய திருடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.