பொதுவாக பார்த்தால், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான எமர்ஜென்ஸி வாகனங்களில், சிவப்பு மற்றும் நீல நிறங்களைக் கொண்ட எமர்ஜென்ஸி விளக்குகள் தான் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு வண்ணம் நிறுத்தம் மற்றும் எச்சரிக்கை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதால் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல நீல வண்ணம் இரவு நேரத்திலும் பார்வைக்கு எளிதாக புலப்படும் என்பதால் அந்த நிற விளக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன.