மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘X’ தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தமிழக மக்கள் அனைவருக்கும் பாஜக சார்பாக, இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் தோழனாகவும், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் விளங்கும் பசுக்கள், எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம். அவற்றின் பங்களிப்பைப் போற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.