மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு விதமான காளைகள் களமிறங்கி மாடுபிடி வீரர்களுக்கு சவால்களை கொடுத்தன. அதில் உச்சமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவின் காளை அனைத்து வீரர்களையும் திணறடித்தது. வீரர்கள் அந்த காளையை தொட கூட முடியாத அளவுக்கு களத்தில் சீறிட்டது. இதனால் காளையர்கள் வெடவெடத்து போனார்கள். இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.