’பறவைகளின் அரசன்’ என்று அழைக்கப்படும் கழுகு ஒரு கொன்றுண்ணி பறவையாகும். உலகிலேயே மிகப்பெரிய கழுகுகளில் முதன்மையானது 'ஹார்பி' கழுகுதான். இது சக்தி வாய்ந்தவை, இதன் தோற்றம் கம்பீரமானது, முழுமையாக வளர்ந்த ஹார்பி கழுகு, சுமார் 100 சென்டிமீட்டர் உயரம் இருக்கும், இதன் இறக்கைகள் 2 மீட்டர் நீளம் வரையில் வளரக்கூடியது. பெண் கழுகின் எடை ஆண் கழுகின் எடையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.