தனது பரிசை பெண் மாட்டு உரிமையாளருக்கு கொடுத்த வீரர்

71பார்த்தது
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (ஜன. 14) விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், பெண் மாட்டு உரிமையாளர் அவிழ்த்த காளையை வீரர் ஒருவர் பிடித்தார். அவருக்கு தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த பரிசைப் பெற்ற வீரர், அவற்றை அந்த பெண்ணிற்கே கொடுத்து அனுப்பி வைத்தார். இதுகுறித்து அந்த வீரர் கூறுகையில், “அந்த பொண்ணு மாடு அவிழ்த்தது தெரியாது. சங்கடமாக இருந்தது அதனால் எனது பரிசை கொடுத்தேன்” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி