வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயம் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் இவை இல்லாமல் சீமேன் புக் (Seaman Book) வைத்திருந்தாலும் விமானத்தில் பயணிக்கலாம். இந்த ஆவணம் கடற்படை சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வணிக கப்பல்கள், பயணிகள் கப்பல், மீன்பிடி கப்பல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் போன்று வழங்கப்படும் பிரத்யேகமான அடையாள ஆவணம் தான் சீமேன் புக்.