பென்னாகரம்: கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் சில நாட்களுக்கு முன்பு பாலக்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த தமிழரசன், பென்னாகரத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட் டது. தொடர்ந்து கஞ்சா விற்பனை தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்த 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பரிந்துரை செய்தார். இதையடுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று (அக்டோபர் 05) அளித்த உத்தரவுப்படி தமிழரசன், மணிகண்டன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.