கடையடைப்பு போராட்டம் வெற்றி, நன்றி கூறிய எம்எல்ஏக்கள்

64பார்த்தது
தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடை அடைப்பு போராட்டம் காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று நடைபெற்றது இன்று அக்டோபர் 04 மாவட்டம் முழுமையும் வணிகர்களும் பொதுமக்களும் அரைநாள் கடை அடைப்பில் ஒத்துழைப்பு நல்கியதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி மற்றும் தர்மபுரி பாமக மேற்கு மாவட்ட செயலாளரும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வணிகர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் மாற்றுக் கட்சியினர் உட்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத ஒரு திட்டம்தான் காவேரி உபரி நீர் திட்டமாகும் எனவே தமிழக அரசு நேற்று உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது அதை உடனடியாக நிறைவேற்றினால் நலமாய் இருக்கும் என செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் ஜிகே மணி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி