பாலக்கோடு - Palacode

தர்மபுரி: ஏரி நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

தர்மபுரி இலக்கியம்பட்டி பஞ்சாயத்தில் பிடமனேரி நெல்லி நகர், வி. ஜெட்டி அள்ளி, மாந்தோப்பு, மொன்னையன் கொட்டாய், பெருமாள் கோவில் தெரு, நந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது இந்த பகுதிகளில் 6000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருவது மட்டுமின்றி நூறுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகிறது. இந்த நிலையில் பிடமனேரி ஏரியில் 7 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றார். இதனால் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற முடியாததால் ஏரி முழுவதும் மாசு ஏற்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் இருந்து வருகிறது. மேலும் ஏரி நிறைந்த பின்பு ஏரிக்கோடி வழியாக செல்லும் உபரி நீர் கால்வாய் இன்றி விவசாய நிலத்திற்குள் செல்வதால் விவசாயம் செல்ல முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். அதனால் ஏரிக்கோடி கால்வாய் தூர்வாரி கான்கிரீட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலக்கியம்பட்டி பஞ்சாயத்து பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வீடியோஸ்


தர்மபுரி