பாலக்கோடு: வார சந்தையில் 21 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

58பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உட்பட்ட காரிமங்கலத்தில் திங்கட்கிழமை நாட்களில் தேங்காய்கள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுகிறது வழக்கம். நேற்று பிற்பகல் நடைபெற்ற வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயம் மற்றும் வியாபாரிகள் தேங்காய்களை விற்பதற்காகவும் வாங்குவதற்காகவும் வந்திருந்தனர்.

மேலும் நேற்று 1 லட்சத்து 75 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அளவைப் பொறுத்து தேங்காய் 8 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விற்பனையானது மேலும் நேற்று ஒட்டுமொத்தமாக 21 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி