தர்மபுரி: நீதிமன்ற வளாகத்தில் பாஜக மாநில துணை தலைவர் பேட்டி

53பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள பாரத் மாதா ஆலயத்தில் 2022-ம் ஆண்டு அத்துமீறிநுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று தர்மபுரி மன்றத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆஜரானார்கள். பின்னர் கே. பி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கல்வி திட்டத்தை ஏற்று செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் வள மான, திறமையான இளைஞர்களை உருவாக்க முடியும். தி. மு. க. விற்கு பிரதான எதிர்க்கட்சி பா. ஜனதாதான். அ. தி. மு. க. அல்ல. தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை அமைக்கவேண்டும் என்ற நோக்கில் பா. ஜனதா செயல்பட்டு வருகிறது.

பல்வேறு துறைகளில் இருந்து 1 லட்சம் இளைஞர் கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது ஒரு இளைஞர் (நடிகர் விஜய்) அரசியலுக்கு வந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா. ஜனதா மாவட்ட தலைவர் பாஸ்கர். மாவட்ட பொது செயலாளர் ஐஸ்வர்யம் முருகன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி