தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் பச்சிணம்பட்டியை சேர்ந்த கிராம பேரூந்து நிறுத்தம் வேண்டி
பச்சிணம்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் இருந்த பேருந்து நிறுத்தத்தை சாலை விரிவாக்க பணிகள் செய்யும் பொழுது பேரூந்து நிறுத்தம் இடிக்கப்பட்டது. கடந்த ஏழு வருடங்களாக பேரூந்து நிறுத்தம் இல்லாமல், பெண்கள், குழந்தைகள், பயணிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் வெய்யிலிலும் மழையிலும் பேரூந்துக்காக காத்து நிற்கும் அவலநிலை உள்ளது எனவே பச்சிணம்பட்டி கிராமத்திற்கு பேரூந்து நிறுத்தம் கட்டித்தர வேண்டுகிறோம் இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.