தர்மபுரி உழவர் சந்தை அருகே அமைந்துள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு நவம்பர் 02 நேற்று நடைபெற்ற ஏலத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், ஈரோடு, பெங்களூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, செங்கம். போன்ற பகுதியில் இருந்து 63 விவசாயிகள் 2655 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 539 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ஒரு கிலோ 361 ரூபாய்க்கும் சராசரியான பட்டுக்கூடு ஒரு கிலோ 464 ரூபாய்க்கும் என விற்பனையானது. நேற்று ஒரே நாளில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 787 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.