விஸ்தாரா விமானங்கள் கடைசி நாளாக இன்று வானில் பறந்து வருகின்றன. ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமம் வாங்கிய நிலையில், விஸ்தாரா நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. 2022 முதலே இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் விஸ்தாரா விமான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. நாளை முதல் விஸ்தாரா விமானங்கள் ஏர் இந்தியா பெயரில் இயக்கப்படவுள்ளன. பயணிகள் கடைசியாக ஒருமுறை விஸ்தாராவுக்கு விடை கொடுத்துள்ளனர்.