உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தங்கள் வீடுகளில் மறைந்த முன்னோர்களுக்காக வழிபடும் நிகழ்வை கல்லறை தினமாக அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நவம்பர் 2 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் அருட்தந்தையர்களின் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் கல்லறைத் தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட கல்லறைகளை பங்கு தந்தையர்கள் மந்தரித்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.