தர்மபுரி: அமைச்சர்கள் தலைமையில் வேளாண்மைத்துறை கருத்தரங்கம்
தருமபுரி மாவட்ட வேளாண்மை வணிகத்துறை சார்பில 4 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும்வகையில் வேளாண்மை துறை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி தலைமையில் நடைபெற்றது முன்னதாக வேளான்மை துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்கினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் KN. நேரு, வேளான்மை துறை அமைச்சர் MRK பண்னீர் செல்வம் கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டனர். பின்னர் நடைபெற்ற வேளான் விளைபொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கினை அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினர் இக்கரத்தரங்கில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருபத்தூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர் இவ்விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் இவ்விழாவில் வேளான்மை துறை முதன்மை செயலாளர் கோ. பிரகாஷ், தருமபுரி மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் மு. இளங்கோவன் தருமபுரி நாடாருமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர்கள், வெங்கடேஸ்வரன், GK மணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.