தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தடங்கம் பஞ்சாயத்து அரசு கலைக்கல்லூரியில் நேற்று அக்டோபர் 29 லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அரசு கலை கல்லூரி முதல்வர் கோ. கண்ணன் தலைமையில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர்கள் பேரா. குப்புசாமி, பேரா. தீர்த்தகிரி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மாணவ மாணவிகளுக்கு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது மேலும் மாணவர் சமுதாயம் தான் எதிர்கால இந்தியா என்றும் மாணவர்கள் தங்கள் பொறுப்புணர்வோடு சமுதாயத்தை கட்டமைக்க மற்றும் சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனை அடுத்து லஞ்ச ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.