டெங்கு கொசு பரவல் குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். கொசுக்களின் இனப்பெருக்கதிற்கு செவிப்புலன் அவசியமானது. ஆண் ஏடிஎஸ் ஈஜிப்டி கொசுக்களின் காது கேட்கும் திறனை செவிடாக மாற்றுவதன் மூலம் பெண் கொசுக்களுடன் இனச்சேர்க்கையை தடுத்து, கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் கொசுக்களால் பரவும் பிற காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த இந்த முறை உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.