பாலக்கோடு: காரில் கடத்தி வந்த 1 டன் குட்கா பறிமுதல்

51பார்த்தது
பாலக்கோடு: காரில் கடத்தி வந்த 1 டன் குட்கா பறிமுதல்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து பகுதிகளுக்கு தமிழகத்தின் தமிழக பல்வேறு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை கடத்துவதாக பாலக்கோடு டி. எஸ். பி. மனோகரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், இன்று விடியற்காலை 4 மணிக்கு உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மகேந்திரமங்கலம் காவலர்கள் கண்காணிப்பு பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த இன்னோவா சொகுசு காரை காவலர்கள் நிறுத்த கூறினர். காவலர்களை கண்டதும் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்தவர் தப்பி ஓடி தலைமறைவாகினர். காவலர்கள் காரை சோதனை செய்ததில் அதில் சுமார் மூட்டைகளில் 40 மூட்டைகளில் 3 லட்சம் மதிப்பிலான 1 டன் குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து சொகுசு காரை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்த காவலர்கள் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவானர்வர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி