தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரத்தில் த. வெ. க. கட்சி பெயர் பலகை பேருந்து நிலையம் அருகில் கட்சி நிர்வாகிகளால் வைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடக்க இருந்தது. தகவல் அறிந்த காவலர்கள் விரைந்து வந்தனர். அப்போது அனுமதி இல்லாமல் பெயர் பலகை வைக்க கூடாது என்று கூறினர். அதற்கு த. வெ. க. கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனுமதி இல்லாமல் பெயர் பலகை வைக்க கூடாது என்று கூறி காவலர்கள் பெயர் பலகையை அப்புறப்படுத் தினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.