தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது, இந்திய அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையை வழங்கி வருகிறது. இதில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய் வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் பயன்பெறலாம். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது தங்கள் பகுதியில் உள்ள தபால்காரரை தொடர்பு. https: //ccc. cept. gov. in/ServiceRequest/request. aspx என்ற இணையதள முகவரி மூலமும், "Postinfo" செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்க அனைத்து தபால் நிலையங்களிலும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.