தமிழக முழுவதும் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசைகள் மாறுபாட்டில் காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 31 நேற்று பிற்பகல் முதல் தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், மற்றும் பாலக்கோடு, பென்னாகரம், சோம்பட்டி, புலிக்கரை, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாத கன மழை கொட்டி தீர்த்துள்ளது மேலும் ஒரு சில இடங்களில் விட்டு இடைவிடாத மழை பொழிந்துள்ளதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.