பாலக்கோடு: காரிமங்கலம் அருகே சூதாடிய 13 பேர் கைது

83பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின் பேரில் காரிமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் காவலர்கள் பெரியாம்பட்டி, அடிலம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, பெரியாம்பட்டி தனியார் கல்லூரி ஹாஸ்டல் பின்புறம் கூடைகாரன் கொட்டாய், பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த காரிமங்கலம், சப்பானிப் பட்டி, பெரியாம்பட்டி, தர்மபுரி, காவேரிப்பட்ட ணம் ஆகிய பகுதிகளைசேர்ந்த செல்வம், சென்ன கிருஷ்ணன், முருகன், சக்திவேல், சரவணன், கணேசன், மஞ்சு, வெற்றிவேல், பாலாஜி, அங்குசெட்டி, ராஜ்குமார், சரவணன், பரிமளம் ஆகிய 13 பேரை கைது செய்து பணம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி