தர்மபுரி: காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

64பார்த்தது
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் அக்டோபர் 30 நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் 33 காவல் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு 23 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது மேலும் புதிதாக பெறப்பட்ட 14 மனுக்களை அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு மேல்விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி