அரூர்: மொரப்பூர் அருகே இளைஞர் படுகொலை.. காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் அடுத்த கல்லடிப்பட்டி பேருந்து நிலையத்தில் கணபதிபட்டியை சேர்ந்த பழனி மகன் ராஜாராம் என்பவரை நேற்று (அக் 22) இரவு மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று (அக் 23) காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.