தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி, அரூர் என் என் மஹால் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று அக்டோபர் 20 நகர செயலாளர் பாபு ஒன்றிய செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, கே. பி அன்பழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கட்சி பணிகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர்கள் அதிமுக அரசு கொண்டுவந்த பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து மீண்டும் தமிழகம் முதலமைச்சராக கொண்டு வர பாடுபட வேண்டும் என தெரிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.