அரூர் வட்டம் பையர்நாயக்கன்பட்டி மற்றும் நரிப்பள்ளி, கோட்டபட்டி, பெரியபட்டி சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் லேசான சாரல் தொடங்கி தற்போது கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அலுவலகம் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.