தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று அக்டோபர் 22 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.