ரூ.120 கோடி முதலீடு.. தொழிற்சாலையை நவீனமயமாக்கும் டிவிஎஸ்

55பார்த்தது
ரூ.120 கோடி முதலீடு.. தொழிற்சாலையை நவீனமயமாக்கும் டிவிஎஸ்
ஓசூரில் ரூ.4,322 கோடி முதலீட்டில் டிவிஎஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தற்போது, ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. 3.28 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள கட்டுமான பகுதியை 5.22 லட்சம் சதுர அடி பரப்பளவாக விரிவாக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி