தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் அருகே உள்ள சூரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கோவிந்தம்மாள் 80 வயது முதாட்டி, இவர் நேற்று அக்டோபர் 22 மாலை தனது வீட்டிற்கு மேல் உள்ள தண்ணீர் தொட்டிக்கு நீர் ஏற்றுவதற்காக வீட்டில் அமைக்க பட்டிருந்த மோட்டார் ஸ்விட்ச்சை போட்டுள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கி முதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மொரப்பூர் காவலர்கள் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.