
விருத்தாசலம்: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எம். அகரம் கிழக்கு தெருவை சேர்ந்த சுப்புராயலு மகன் ரூபாகரன் இவர் நேற்று இரவு விருத்தாசலம் -உளுந்தூர்பேட்டை சாலையில் பெரியவடவாடி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் எதிர் பாராதவிதமாக லாரி சக்கரத்தில் சிக்கிய ரூபாகரன் தலை நசுங்கி பலியானார். இது குறித்த தகவலின் பேரில் மங்கலம்பேட்டை காவல் துறை விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.