கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திருப்பெயரில் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக முதல்வர் ஸ்டாலின் வந்ததும், பெற்றோர்கள், ஆசிரியர்களை வணங்குகிறேன் என்று வணக்கம் தெரிவித்து உரையைத் தொடங்கியதோடு, தான் வரும் வழிகளில் எல்லாம் மக்களை சந்தித்தேன். எனவே தான் தாமதமாகிவிட்டது என்று, விழாவில் பங்கேற்றவர்களிடம், விழாவுக்கு தாமதமாக வந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.