ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை தோனி வழிநடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார். நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.