கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று சண்டிகேஸ்வரர் உற்சவம், நாளை 15 ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.