வேப்பூர்: 3 ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதல்

68பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் மேம்பாலத்தில் 3 ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்ட விபத்தில் 35 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிகாலையில் வேப்பூர் மேம்பாலத்தில் ஆம்னி பேருந்தை நிறுத்திய போது பின்னால் வந்த 2 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்த 3 பேருந்தில் இருந்தவர்களை மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி