சித்திரை திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்

63பார்த்தது
மதுரை: சித்திரை திருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் வகையில் மீனாட்சியம்மன் கோயில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஏப்ரல் 29 சித்திரை திருவிழா கொடியேற்றம், மே 6 மீனாட்சி பட்டாபிஷேகம், மே 8 மீனாட்சி திருக்கல்யாணம், மே 9 மீனாட்சி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. கள்ளழகர் கோயிலில் மே 10 கள்ளழகர் புறப்பாடு, மே 11 கள்ளழகர் எதிர்சேவை, மே 12 கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி