கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் சரகம் நல்லூர் கிராமம் மணிமுத்தாற்றில் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு இன்று 12. 3. 2025 தேதி பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த முதல் நிலை காவலர் தென்எழிலன் விரைவாக செயல்பட்டு பொதுமக்களை பத்திரமாக கரையேற்றினார். சாதுரியமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றிய காவலரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.