அமெரிக்க வாழ் இந்திய குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று (07.02.2025) கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.ஆர். இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, வட்டார, சார்பு அணி மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.