கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாஷ்கண்ட் நகரை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது மகன் சையது அசாருதீன் இவர் காட்டுக்கூடலூர் சாலை திரு. வி. க. நகரில் பீடா மற்றும் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அண்ணாநகரை சேர்ந்த தாரிக், வினித், பூதாமூர் முகேஷ் ஆகிய 3 பேரும் வந்தனர்.
அந்த சமயத்தில் சையது அசாருதீன் பேசிக் கொண்டிருந்த செல்போனை 3 பேரும் கேட்டு தகராறு செய்தனர். செல்போன் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் அசிங்கமாக திட்டி கடையில் இருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் சையது அசாருதீனை சரமாரியாக தலையில் தாக்கினர். இது குறித்து சையது அசாருதீன் கொடுத்த புகாரின் பேரில் தாரிக், வினித் முகேஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.