கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு கோவிலை கட்டிய விபச் சித்து முனிவருக்கு பழமலைநாதர் காட்சி அளிக்கும் ஐதீக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகின்ற 11 ஆம் தேதி தேரோட்டம், 12 ஆம் தேதி மாசி மக பிரம்மோற்சவம், 13 ஆம் தேதி தெப்ப உற்சவம், 14 ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற உள்ளது.