
கடலூர்: ஶ்ரீ முஷ்ணம் பகுதியில் அதிகபட்ச மழை பதிவு
கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (17. 04. 2025) காலை 8. 30 மணி நிலவரப்படி ஶ்ரீ முஷ்ணம் பகுதியில் 5. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் மாவட்டத்தில் வேறு எந்த இடத்திலும் மழை பதிவாகவில்லை.